கோவையில் நடைபெறும் பாராட்டு விழாவிற்கு இரண்டு வேன்களில் பங்கேற்பதென ஆவடி மாவட்டம் அம்பத்தூர் பாடி கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

2 Min Read
- Advertisement -

பாடி, நவ. 2- ஆவடி மாவட்டம் அம்பத்தூர் – பாடி பகுதி கழக கலந்துரை யாடல் கூட்டம் 01-11-2026 அன்று மாலை 05-30 மணிக்கு பாடி பகுதி கழக செயலாளர் எ.கண்ணன் தலைமையில் பாடி பகுதி கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் துரைராவணன் இல்லத்தில் மாவட்ட கழக இளைஞரணி துணைச்செயலாளர் சென்னகிருட்டினன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட கழகச் செயலாளர் க.இளவரசன் நோக்கவுரையாக ஆவடி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் சிலை நிறுவுதல் பகுதி கழகங்களின் வளர்ச்சி மற்றும் டிசம்பர் 02 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி பெரியார் மாளிகையில் இருந்து ஊர்வலமாக சென்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டுமென அறிவித்தார்.

அதை தொடர்ந்து அம்பத்தூர் பகுதி கழகத் தலைவர் பூ.இராமலிங்கம் திருமுல்லைவாயல் பகுதி தலைவர் இரணியன், பாடி பகுதி கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் துரை ராவணன், பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால்,ஆவடி மாவட்ட கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் பன்னீர் செல்வம், மாவட்ட கழக மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி, கழக ஆதரவாளர் அமிர்தராஜ் ஆகியோர் உரையாற்றிய பின் மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் தனது நோக்கவுரையில் கூறிய காரணங்களை வலி யுறுத்தியும் நவம்பர் 4ஆம் தேதி கோயம்புத்தூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெறும் “பெரியார் அறிவுலகம்” கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழாவில் இரண்டு வேன்களில் தோழர்கள் பங்கேற்பது குறித்து உரையாற்றினார்.

நிகழ்வில் ஆவடி மாவட்ட கழக துணைச்செயலாளர் க.தமிழ்ச் செல்வன், இளைஞரணிச் செயலாளர் சு.வெங்கடேசன், பூவிருந்தவல்லி பகுதி கழகச் செயலாளர் தி.மணிமாறன், மகளிரணித் தோழர்கள் புஷ்பா, தீபா, பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், முகப்பேர் முரளி, இளைஞரணி மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக அம்பத்தூர் பகுதி கழகச் செயலாளர் அய்.சரவணன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *