நெற்பயிர்கள் கால்நடைகளுக்கு இரையாகும் அவலம் தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயிகள் துயரம்!

1 Min Read
- Advertisement -

மன்னார்குடி, நவ. 2- காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்லாததால் காலதாமதமாக கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.

இதனால் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருத் துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்தனர். இதையடுத்து சம்பா சாகுபடியையாவது மேற் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் டிராக்டர் மூலம் விளை நிலங்களை உழுது நேரடி நெல் விதைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அவ்வப்போது பெய்த மழையால் விதைகள் முளைத்து பயிர்கள் நன்கு வளரத் தொடங்கின. ஆனால், மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் போதிய அளவு வந்து சேரவில்லை.

குறிப்பாக, கோட்டூர் அருகே சித்தமல்லி, புத்தகரம், செருகளத்தூர், பால கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டது.

பயிர்கள் வளர்ந்து வரும் தருணத்தில் தண்ணீர் கிடைக் காததால், சாகுபடியை தொடர முடியாமல் விவசாயிகள் தவித்து உள்ளனர். ஒருபுறம் குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், மறுபுறம் சம்பா சாகுபடியும் கைவிட்டு போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் இல்லாததால் இனி சாகுபடி செய்து எந்த பலனும் இல்லை என்ற விரக்தியில் விவசாயிகள் சாகுபடியை கைவிட்டு உள்ளனர்.

இதனால் விவசாயிகள் தங்களது உழைப்பையும், முதலீட்டையும் இழந்து தவிக்கும் நிலையில் வயல்களில் நன்கு வளர்ந்து வந்த இளம் நெற்பயிர்களை தற்போது கால்நடைகள் மேய்ந்து வருகிறது. விவசாயிகளின் வியர்வையால் வளர்ந்த நெற்பயிர்கள், கால் நடைகளுக்கு இரையாகி உள்ளது கண்களில் கண்ணீரை வரவழைக் கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *