புனேயில் உள்ள ராணுவ இன்ஜினியரிங் கல்லூரியில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : எம்.டி.எஸ்., 49, லோயர் டிவிஷன் கிளார்க் 14, லாஸ்கர் 13, பிட்டர் 6, கார்பென்டர் 5, சேன்ட் மாடெலர் 4, நூலக கிளார்க் 2, ஆய்வக உதவியாளர் 5, மெக்கானிக் 2, அக்கவுன்டன்ட் 1, ஸ்டோர்கீப்பர் 2, ஸ்டோர்மேன் டெக்னிக்கல் 1, மோட்டார் டிரைவர் 3 உட்பட மொத்தம் 119 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பெரும்பாலான பதவிகளுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு டிகிரி தேவைப்படும்.
வயது : மோட்டார் டிரைவர் பணிக்கு 18 – 30, மற்ற பிரிவுகளுக்கு 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
கடைசிநாள் : 4.3.2023
விவரங்களுக்கு: cmepune.edu.in/Index.aspx