சென்னை, பிப். 22. பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் சிந் தனை உயராய்வு மய்யம் சார்பில் நாடுமுழுவதும் பெரியார் 1000 போட்டித் தேர்வு மாணவர்களி டையே நடத்தப்பட்டு போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு மாவட் டந்தோறும் பரிசளிப்பு சான்றிதழ் அளித்து பாராட்டு தெரிவிக்கப் பட்டு வருகிறது.
சென்னை பூவிருந்தவல்லி வடக்கு மலையம்பாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 21-2-2023 அன்று மதியம் 3-00 மணிக்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் தலைமையில் அறிவியல் ஆசிரியர் நிர்மல்குமார் ஒருங்கிணைப்பில் தமிழாசிரியர் சி.மீனா வரவேற்பு ரையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா.ரத்தினசாமி, அயன்புரம் துரைராஜ் ஆகியோர் பெரியாரின் தன்னலமற்ற சேவை பற்றி மாணவர்களிடையே எழுச்சி உரையாற்றி தேர்ச்சி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசளித்தனர்.
நிகழ்வில் தென் சென்னை மாவட்ட கழக துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், ஆவடி மாவட்ட கழக துணை செயலாளர் பூவை க.தமிழ்ச்செல் வன், பூவை பகுதி கழக இளைஞரணி தலைவர் சு.வெங்கடேசன் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் கழக பொதுக்குழு உறுப்பினர் பூவை தி.மணிமாறன் நன்றியுரை யுடன் விழா இனிதே நிறைவுற்றது.