22.2.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இந்திய பொருளாதார மந்த நிலை ஒன்றிய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியதற்கு மாறாக உள்ளது என்கிறார் கட்டுரையாளர் பர்சா வெங்கடேஷ்வர ராவ் .
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் விழாவாக அமையும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வெ.கி.ச. இளங்கோவனை ஆதரித்து ஈரோட்டில் இரண்டாவது நாளாக பிரசாரம் செய்த உதயநிதி ஸடாலின் கூறினார்.
தி டெலிகிராப்:
* கவுதம் அதானி சம்பந்தப்பட்ட சில ரஷ்ய ஒப்பந்தங்களைக் குறிப்பிட்டு, இந்திய வரி செலுத்துவோரின் பணத்தை அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு நிதி யளிக்கும் தனியார் இந்திய நிறுவனங்களுக்கு மாற்றினாரா என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* 2024 தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே உறுதி.
– குடந்தை கருணா