அந்நியச் செலாவணி கையிருப்பு 58,353 கோடி டாலராக வீழ்ச்சி

1 Min Read

அரசியல்

மும்பை, நவ.1- கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 58,353 கோடி டாலராக சரிந்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 236 கோடி டாலர் சரிந்து 58,353 கோடி டாலராக உள்ளது.

கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் முந்தைய வாரத்தில் அது 115.3 கோடி டாலர் அதிகரித்து 58,589.5 கோடி டாலராக இருந்தது. 

அக்டோபர் 2021-இல் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசர்வ் வங்கி பயன்படுத்துவதால் அது குறைந்து வந்தது.

கடந்த 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 415 கோடி டாலர் சரிந்து 51,520 கோடி டாலராக உள்ளது.

டாலர் அல்லாத யூரோ, பவுண்ட், யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் டாலர் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும். மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 185 கோடி டாலர் அதிகரித்து 4,542 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆர்) 7 கோடி டாலர் சரிந்து 1,793 கோடி டாலராக உள்ளது. பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 60 லட்சம் டாலர் அதிகரித்து 498 கோடி டாலராக உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *