தமிழ்நாட்டில் 20 அய்ஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

1 Min Read
- Advertisement -

சென்னை, அக். 29- தென்காசி, கரூர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 20 அய்ஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் எம்.சாய்குமார் நேற்று (28.10.2026) இரவு வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (சிஎம்டிஏ) தலைமைச் செயல் அலுவலர் எஸ்.பி.கார்த்திகா மாற்றப்பட்டு, சமூக நலத் துறை கூடுதல் செயலராக நியமிக்கப்படுகிறார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா மாற்றப்பட்டு, தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் சி.முத்துக்குமரன் மாற்றப்பட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார்.

தமிழ்நாடு ஆளுநரின் துணைச் செயலர் எஸ்.பிரசன்னா ராமசாமி இடமாற்றம் செய்யப்பட்டு கரூர் மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்படுகிறார். இவர்கள் உட்பட மொத்தம் 20 அய்ஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *