பன்னாட்டு புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

1 Min Read
- Advertisement -

பெஹ்ரான், அக்.29- ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு அளவில் விருதுகளைப் பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு 5 ஆண்டுகள் மற்றும் 1 மாதம் சிறைத் தண்டனை விதித்து, தெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே, ஈரானிய அரசுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட இயக்குநர் ஜாஃபர் பனாஹிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், ஜாஃபர் பனாஹியின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதோடு, 2 ஆண்டுகளுக்கு அவர் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இயக்குநர் ஜாஃபர் பனாஹி 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும், அதே ஆண்டில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், திரைப்படங்களை இயக்கவும், திரைக்கதை எழுதுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜாஃபர் பனாஹி 7 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2023 பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். ஈரானிய அரசு விதித்துள்ள தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இடையே இயக்குநர் ஜாஃபர் பனாஹி ஈரானிய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிரான கதைக்களத்துடன் படங்களைத் தொடர்ந்து இயக்கி வருகிறார்.

இவரது, “திஸ் இஸ் நாட் எ ஃபிலிம் (2011)”, டாக்ஸி (2015) மற்றும் “நோ பேர்ஸ் (2022)” உள்ளிட்ட படங்கள் பன்னாட்டு விழாக்களில் விருதுகளைக் குவித்துள்ளன. அண்மையில் வெளியான இவரது “இட் வாஸ் ஜஸ்ட் என் ஆக்சிடெண்ட்” எனும் திரைப்படம் 2025-ஆம் ஆண்டின் கான்ஸ் பன்னாட்டு திரைப்பட விழாவில் பால்ம் டி ஆர் விருதைப் பெற்றதுடன், ஆஸ்கர் விருதுகளில் 2 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *