குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சி தரும் திட்டம்

3 Min Read

தமிழ்நாடு

3 வகைகளில் புதிய சத்துமாவு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னை, பிப். 23- தமிழ்நாட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கும், குழந்தைக ளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைப் போக்க தமிழ்நாடு அரசு, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அங்கன்வாடி மய்யங்கள் வாயிலாக இணை உணவாக சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கப் பட்டு வருகிறது. 2 கிலோ எடை கொண்ட இந்த சத்துமாவு பாக்கெட் டுகள் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இதேபோல, 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்து நிலையை முன்னேற்ற ‘பிரதமரின் ஊட்டச்சத்து ஒருங்கிணைப்புத் திட்டம்’ ஒன்றிய அரசால் செயல்படுத் தப்படுகிறது. ஒன்றிய-மாநில அரசுகளின் பங்களிப்பு அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்டறிய தமிழ்நாடு அரசு திட்டமி ட்டது. அதன்படி, 2022ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களில் உள்ள 38 லட்சம் குழந்தை களிடம் ஊட்டச்சத்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், மாநிலம் முழுவதும் 9.3 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 2022-ம் ஆண்டு மே 7ஆம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்து, மே 21ஆம் தேதி நீலகிரியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதேபோல, அங்கன்வாடி மய்யங்கள் மூலம் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப் பட்டு வரும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மாற்றங்களை தமிழ்நாடு அரசு செய் துள்ளது. அதன்படி, இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையுடன் கூடுதல் சுவை, புரதச்சத்து விகிதத்தை அதிகரித்து வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய 3 வண்ணங்களில் மாவு பாக்கெட்டுகள் வகை பிரித்து வழங்கப் பட உள்ளது. இதில், வெள்ளை நிற பாக்கெட்டுகள் 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், இளஞ்சிவப்பு நிற பாக்கெட் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய் மார்களுக்கு நீல நிற பாக்கெட்டுகளும் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய சத்துமாவு பாக்கெட்டுகள் மார்ச் 1ஆம் தேதி முதல் அங்கன்வாடி மய்யங்கள் மூலம் வழங்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- புதிய சத்துமாவு பாக்கெட் வழங்கும் திட்டத்தில் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையுடன் (பி.அய்.எஸ்.) குழந்தைகளுக்கான சத்துமாவு வழங்கப்பட இருக்கிறது. 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ‘வெனிலா’, ‘சாக்லேட்’, ‘ஸ்டாபெர்ரி’ போன்ற சுவை உடைய சத்துமாவு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகள் ஆர்வமுடன் சத்துமாவு சாப்பிடுவார்கள். இதேபோல, கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரே வகையிலான மாவு பாக்கெட்டுகள் வழங்கப்படும். இவர்களுக்கான சத்து மாவில் இனிப்பு சதவீதத்தை குறைத்து புரத சத்துக்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங் கப்பட்டு வந்த சத்துமாவுக்கும், புதிதாக வழங்கப்பட உள்ள சத்துமாவுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையுடன் சத்துமாவு வழங்கப்பட வேண்டும் என்பதால் கூடுதலாக சிலவற்றை இணைத்துள்ளோம். முன்பு அனைவருக்கும் 2 கிலோ அளவுடைய பாக்கெட் மாவுகள் வழங்கப்படும். இப்போது, 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 2 கிலோ பாக்கெட்டு வழங்கப்படும். 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், பாலூட்டும் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 500 கிராம் பாக்கெட்டுகள் வழங்கப்படும். அனைத்து அங்கன்வாடி மய்யங்க ளுக்கும் புதிய சத்துமாவு பாக்கெட்டுகள் அனுப்பும் பணி தொடங்கிவிட்டது. இந்த திட்டத்தை மார்ச் 1ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *