சென்னை, பிப்.24 அய்க்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட பாதுகாப்பு தீர்வுகள் வழங்குநரான செக்யூர் கேம் அய்டி சொல்யூஷன்ஸ் நிறுவனம் இந்திய நகரங்களை இலவச சி.சி.டி.வி. கேமரா அமைப்புகளுடன் செயல்படுத்துவதற்கான செக்யூர் அவர் சிட்டி இந்தியா என்னும் பிரச்சாரத்தை சென்னையில் இருந்துதொடங்கியுள்ளது. இந்த பிரச்சா ரத்தை மேற்கு வங்கத்தின் மேனாள் ஆளுநர் எம்.கே. நாராயணன் தொடங்கி வைத்து பேசுகையில்:
“இன்று பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பு ஒரு முக்கிய கவலையாக உள்ளது. குடிமக்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதில் அரசாங்கமும் காவல்துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும் குடிமக்கள் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாப்பதில் தங்கள் பங்கைச் செய்ய வேண்டிய தேவையும் உள்ளது. இந்த பிரச்சாரம் அதை நிறைவேற்றுவதற்கு நீண்ட தூரம் பயணம் செய்யும்” என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் செக்யூர் கேம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஹ்மத் அல்மரார், தலைமை நிர்வாக அதிகாரி ரிஜாய் தாமஸ் ஆகியோர் தனது புதிய அலுவலகத்தை சென்னையில் உள்ள கோர்ட்யார்ட் பை மேரியட்டில் அறிமுகம் செய்தனர்.