கோவை, பிப். 24- கோவை தெற்கு பகுதி கழக கலந்துரையாடல் கூட்டம் கடந்த 22.02.2023 அன்று மாலை 7.00 மணியள வில் குறிச்சி பெரியார் பாசறையில் பகுதிக் கழக செயலா ளர் தெ.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலை வர் தி.கசெந்தில்நாதன், மாவட்ட கழக காப்பாளர் ம.சந்திரசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், மாநில மாணவர் கழக துணை செயலாளர் மு.ராகுல்,மண்டல செயலாளர் ச.சிற்றரசு,மாநகர தலைவர் வே.தமிழ் முரசு, மாந கர அமைப்பாளர் இரா.வெங் கடேசன், மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் அக்ரி.அ.நாகராஜ் மாவட்ட தொழிலாளர் அணி செயலா ளர் ஆர்.வெங்கடாசலம் மாவட்ட இளைஞரணி தலைவர் ரா.சி.பிரபாகரன், பகுத்தறிவாளர் கழகம் சிவக்குமார், இலைக் கடை செல்வம், முத்துகணேசன், ந.குரு, ஆவின் சுப்பையா, ஜெ. வடிவேல் ஆகியோர் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்து கொண் டார். இறுதியாக பிள்ளையார் புரம் ஆனந்த் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
தீர்மானம் 1: கழகத்தின் தெற்கு பகுதி செயல்வீரர் பெயிண்டர். ஆறுமுகம் அவர்க ளின் மறைவிற்கும், கு.வெ.கி ஆசான் அவர்களின் துணைவி யார் பேராசிரியர் சாரதாமணி அம்மையார் அவர்களின் மறை விற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கின்றது
தீர்மானம் 2: கோவை தெற்கு பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.