ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 1: வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில் மதவாத, சனாதனத்திற்கு எதிராக உள்ள கட்சித் தலைவர்களை ஒருங் கிணைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்களா?

– தி.ஆறுமுகம், உத்திரமேரூர்

பதில் 1: இப்போதுள்ள சூழ்நிலையில் எனது பங்குக்கு எவ்வளவு, எப்படி, எந்த அளவு முடியுமோ அதனைச் செய்வது உறுதி!

கேள்வி 2: தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாக அன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி கூறினார்; அதே கருத்தினை இன்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறனும் தெரிவித்துள்ளாரே, இதுகுறித்து தங்களின் கருத்து?

-மன்னை சித்து, மன்னார்குடி

பதில் 2: இதற்கு ஏற்கெனவே பதில் அளித்து ‘விடுதலை’யில் வந்துள்ளது. அதனைப் பாருங்கள்.

கேள்வி 3: இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்போர் தலைக்கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கிறார்கள் காவல் துறையினர். அதேபோல், அரசின் அனைத்து சட்ட விதிகளையும் கடைப் பிடிக்கிறார்களா? உதாரணத்திற்கு சாலையில் மாடுகள் திரிந்தால் கண்டுகொள்வதில்லையே, ஏன்?

-பா.முகிலன், சென்னை-14

பதில் 3: சட்டம் எல்லோருக்கும் எல்லா காலத் திலும் ஒன்றுதான்; கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப் பட வேண்டும். பசுத்தாயை அரவணைக்க திட்டமிட்டோரே இதற்கும் அரவணைத்து அப்புறப்படுத்த முன் வந்தால் நாம் நன்றி கூறுவோம் – அவர்களுக்கு!

கேள்வி 4: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் தரக் குறைவாகப் பேசியுள்ளது எதைக் காட்டுகிறது?

– கி.இராமலிங்கம், செம்பியம்

பதில் 4: அவரது தோல்வி பயத்தின் ஆழத்தையும், உச்சத்தையும் சேர்த்தே காட்டுகிறது!

கேள்வி 5: தாங்கள் மேற்கொண்டுள்ள தொடர் பரப்புரைப் பயணத்தின்போது சந்திக்கும் மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?

– லோ.ஜெகதீஷ், வேலூர்

பதில் 5: மிகப் பெரும் ஆதரவு; பலதரப் பட்டவர்களின் ஒத்துழைப்பு – ஒரு பெரும் மக்களின் ஆதரவுடனே – இளைஞர்களும் போராட்டங்களுக்கு ஆயத்தமாவதை நம் மிடமே தெரிவிக்கின்றனர்!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 6:  உலகப் பணக்காரர்களின் வரிசையில் அதானியின் பின்ன டைவு குறித்து…?

– இரா.செல்வம்,  வாழப்பாடி

பதில் 6: கவலைப்பட வேண்டி யவர்கள் பணம் போட்டு பங்கு வாங்கியவர்கள். மக்களைவிட பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அமைப் பினரே அதிகமாகும்.

கேள்வி 7: தி.மு.க.விற்குத் தாய்க் கழகம் திராவிடர் கழகம்; ஆனால், தி.மு.க.வில்தான் மூடநம்பிக்கைப் பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்களே…?

– கே.கனியமுது, கன்னியாகுமரி

பதில் 7: திருத்துவது நமது நிதானமான தொடர் பணிகளில் முக்கியமானது!

கேள்வி 8: அ.தி.மு.க.வின் கோஷ்டி பூசல் தற்போது அமைதி காப்பது ஏன்?

– ச.சஞ்சய்குமார், விழுப்புரம்

பதில் 8: அவர்கள்  His Master’s Voice – குரலுக்கு ஏற்ப செயல்படுபவர்கள்; அதன்படியே  அவர்தம் செயல்கள் அனைத்தும் அக்கட்சியின் 4 பிரிவுகளுக்கும் ‘லேடி’ தலைவராக இல்லையே – ‘மோடி’தான் என்று காட்டிக்கொள்ளும் வண்ணமே உள்ளது. வேதனை; வெட்கம்!

கேள்வி 9:  சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கோவிலில் இருந்த நடிகர் மயில்சாமி, மரணத்தைத் தழுவியது குறித்து, சிலர் “சிவன் கூட்டிச் சென்றுவிட்டார்” என்றெல்லாம் கூறியுள்ள நிலையில், தங்களது கருத்து என்ன?

– லோ. விஜயலட்சுமி, பெங்களூரு

பதில் 9: அவ்வளவு மனிதாபிமானமற்றவனா சிவன்? அட மூளைகெட்ட மனிதர்களே!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

கேள்வி 10: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை எல்லாம் இன்னும் குறைக்கப்படாமல், அதே நிலைமை நீடிக்கிறதே?

– வே.வேலு,  வந்தவாசி

பதில் 10: மேலும் உயர்ந்தால் அதிசயப்படாதீர்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *