யாருக்கெல்லாம் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறதோ அதை எல்லாம் மீட்டுத் தர தான் இந்த போராட்டம்

1 Min Read
- Advertisement -

– கனிமொழி எம்.பி.

சென்னை, அக். 17- தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத் தினம் மைதானத் தில் 16.10.2026 அன்று நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க. எம்.பி., கனிமொழி பங்கேற்றார்.

போராட்டத்தில் அவர் பேசியதாவது:-

நாட்டில் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டியது அனைத்துமே கண்துடைப்பாக இருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு செய்யும் விவகாரத்தில் பாஜக சார்பில் இருவர், எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெறுகிறார். இதில் இருவர் எடுக்கும் முடிவே இறுதி யானது. பாஜக சார்பில் இருவர் தேர்வு செய்யும் நபரே தலைமைத் தேர்தல் ஆணையர். ஏதாவது ஒரு பிரச்சினை நடக்கும்போது இந்த நாட்டின் உயர் நிலையில் இருப்பவர்கள் எதுவும் பேச மாட் டார்கள். அனைத்தும் நடந்துமுடிந்த பிறகு தான் பேசுவார்கள். எஸ்.அய்.ஆர். நடைமுறையால் 13 கோடி குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்திருக் கிறார்கள். 74 லட்சம் பேர் வாக்களிக்கும் உரிமையை இழந் திருக்கிறார்கள். யாருக்கெல்லாம் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறதோ அதை எல்லாம் மீட்டுத் தர தான் இந்த போராட்டம் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து அவர் வெளி யிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எல்லாம் முடிந்துவிட்டது ஞானேஷ் ப்ரோ” என்று பதிவிட்டுள்ளார். மேலும் தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடு பட்டவர்களுடன் எடுத்த ஒளிப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *