ஈரோடு, பிப். 25- ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று (25.2.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப் பினர் திருமகன் ஈவெரா மறைவால் வெற்றிடமாக இருந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத் தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடு கிறார். இந்த தொகுதியில் சுயேச் சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகி றார்கள். இந்தத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பொறுப்பாளராக ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவனை ஆதரித்து அமைச்சர்கள், தலைவர்கள், காங் கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்து வருகி றார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டா லின் இன்று (25.2.2023) காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவனுக்கு ஆதரவாக இறுதிக் கட்ட பரப்புரையில் ஈடுபட்டார். இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் ஈரோடு வந்தார்.
முதலமைச்சர் காலை 9 மணிக்கு பரப்புரையைத் துவக்கினார் முதலில் சம்பத் நகர், பெரியவலசு, பாரதி தியேட்டர், சத்தி ரோடு, பேருந்து நிலையம், மஜீத் வீதி வழியாக மக்களை சந்தித்தார். கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் காலை 10 மணிக்கு உரையாற்றினார்.
அங்கிருந்து கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக 11 மணிக்கு பி.பி.அக்ரகாரம் பகுதியில் வாக் காளர்களைச் சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பரப்புரை செய்தார்.