சென்னை, பிப். 25- தேசத்தின் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத் தியது காரல் மார்க்ஸ் சிந்தனைதான் என்று, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளைச் சேர்ந் தோரும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், ஆளுநர் ரவியைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் நேற்று (24.2.2023) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் இரா.முத்த ரசன் தலைமை வகித்தார். ஏஐடியுசி பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர்கள் மு.வீர பாண்டியன், பெரியசாமி மற்றும் மாதர் சங்கத்தினர், மாணவர் அமைப்பினர் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு. ஆளுநர் கூறிய கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். பின்னர், இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடுஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து, தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு மக்க ளுக்கும், சட்டப்பேரவைக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறார். அரசமைப்புச் சட்டம், மதச்சார்பின்மைக் கொள்கை களுக்கு எதிராக அவர் தொடர்ந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
தற்போது உலக மாமேதை என்று போற்றப்படுகிற காரல் மார்க்ஸ் குறித்து இழிவுப டுத்தும் வகையில் பேசியுள்ளார். மார்க்ஸ் கூறிய கருத்துகளுக்கு நேர் மாறாக, காரல் மார்க்ஸால்தான் இந்தி யாவில் ஜாதி, ஏழ்மை இருக்கிறது என்ற கருத்தை ஆளுநர் முன் வைத்துள்ளார். அவரது கருத் தைக் கண்டித்து ஆர்ப்பட்டம் நடத்தியுள்ளோம்.
வரும் 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட் டங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். காரல் மார்க்ஸ் குறித்த தனது நிலையை ஆளுநர் ரவி மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவர் கூறிய கருத்தை திரும்பப் பெற வேண்டும். உலக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இதேநிலை தொடர்ந்தால், அவர் செல்லும் அனைத்து இடங் களிலும் கருப்புக் கொடி ஏந்தி, கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெறும். அதனால் ஏற்படும் சட்டம்- ஒழுங்குப் பிரச்சினை களுக்கு ஆளுநர்தான் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.