மேனாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஒ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் (வயது 95) பெரியகுளத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு (24.2.2023) மறைவுற்றார். தகவலறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.