சிவகாசி, பிப். 25- சிவகாசி நகர கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் ம.சிவஞானம் (வயது 85) 24.2.2023 வெள்ளி அதி காலை 5 மணியளவில் உடல்நலக்குறைவு கார ணமாக இறுதி எய்தினார்.
மாவட்ட கழக செய லாளர் விடுதலை தி. ஆதவன், பொதுக்குழு உறுப்பினர் வானவில் வ.மணி, மாநில ப.க. துணைத் தலைவர் கா.நல்லதம்பி, சிவகாசி நகரச் செயலாளர் து.நர சிம்மராஜ், தலைவர் மா. முருகன், அமைப்பாளர் பெ.கண்ணன், மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் ச.சுந்தரமூர்த்தி, நகர கழக இளைஞரணி அமைப்பாளர் ஜீவா முனிஸ்வரன், தோழர் மணிமாறபூபதி மற்றும் தோழர்கள் அன்னாரது இல்லம் சென்று கழகக் கொடி போர்த்தி மலர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.
பரப்புரைப் பயணத் தில் தூத்துக்குடியில் தங் கியிருந்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியறிந்து தொலைபேசி வழி இல் லத்தாருடன் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங் கலுடன் ஆறுதல் கூறி னார்.
மாலை 6 மணியள வில் தோழர்களின் வீர வணக்க முழக்கத்துடன் இறுதிப் பயணம் தொடங் கியது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் இல்லத்தார் தோழர்கள் உறவினர்கள் சூழ அன் னாரது உடல் கொடை யாக வழங்கப்பட்டது. உடற்கொடை பெற்றுக் கொண்ட மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் குடும்பத்தினருக்கும், கழகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.