சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைப் பயணத்திற்காக நெல்லைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், பொன்னாடை அணிவித்து பரப்புரைப் பயணம் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்தார். பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் சட்டப்பேரவையை சிறப்பாக வழிநடத்திச் செல்வதைப் பாராட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்தார் (திருநெல்வேலி, 25.2.2023).