அதானி குழுமத்தில் எல்.அய்.சி. முதலீட்டு மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு

1 Min Read

புதுடில்லி,பிப்.26- அதானி குழும பங்குகளில் எல்.அய்.சி. மேற்கொண்ட முதலீட்டு மதிப்பு இந்த 2023ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து ரூ.50,000 கோடி சரிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை, அதானி குழுமத்தின் பங்குகளுக்கு ஆதரவு பெருகவில்லையெனில், எல்.அய்.சி.யின் இந்த நிறுவனத்தின் மீதான முதலீடு மதிப்பு சரிந்து, நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்த ரூ.53,000 கோடியிலிருந்து வெறும் ரூ.3,000 கோடியாக மாறிவிடும் என்கிறார்கள்.

ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்தது அதானி குழுமத்தின் பங்குகள். இதனால், அதானி குழுமத்தில் எல்.அய்.சி. செய்த முதலீடு மதிப்பானது 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கிட்டத்தட்ட ரூ.83,000 கோடியாக இருந்தது. இதுவே, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.33,000 கோடியாக சரிந்துள்ளது.  அதாவது, ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்ட போது, அதானி குழுமத்தில் எல்.அய்.சி. மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அதானி குழுமத்தின் மிகப்பெரிய பங்குகளை வாங்கியிருக்கும் எல்.அய்.சி. நிறுவனம், ஜனவரி 30ஆம் தேதிக்குப் பிறகு எந்த விதமான பங்குகளையும் வாங்கவோ விற்கவோ இல்லை என்று கருதப்படுகிறது. இதுவரை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனப் பங்குகளை எல்அய்சி நிறுவனம் ரூ.30,127 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்.அய்.சி. 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கியிருக்கிறது.

இதுபோல அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவிகிதப் பங்குகளை எல்அய்சி வைத்துள்ளது.  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்திருக்கும் அதானி குழுமத்தின் பங்குகளில், எல்.அய்.சி.யின் முதலீட்டு மதிப்பும் 25,500 கோடியிலிருந்து ரூ.5,200 கோடியாக சரிவடைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *