மோடி ஆட்சி ‘சலுகை முதலாளித்துவத்தின் (crony capitalism) ஆகப்பெரும் பயனாளியான அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களின் மூலதனப் பங்குகளில், பொதுத்துறை நிறுவனமான எல்.அய்.சி. ரூபாய் 30127 கோடி முதலீடு செய்திருந்தது(கடனாகக் கொடுத் திருக்கும் ரூபாய் 5790 கோடி தவிர 2023 ஜனவரி 24 அன்று வெளிவந்த அமெரிக்க பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன் பர்க்’கின் அறிக்கை, அதானி குழுமத்தின் கணக்கு-வழக்கு மோசடி, அதன் நிறுவனப் பங்குகளின் மதிப்பு செயற்கையாக உயர்த்தப்பட்டிருப்பது, வெளிநாடு களில் போலியான நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் மூலம் முறைகேடான பணத்தை சலவை செய்து (money laundering) வெளிநாட்டு முதலீடாகக் கொண்டு வருவது போன்ற கிறுகிறுக்க வைக்கும் பித்தலாட் டங்களை அம்பலப்படுத்தியது. அதன் ஆய்வு முடிவு அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் போலியான சந்தை மதிப்பை, ஊசியால் குத்தி காற்றடைத்தப் பலூனை உடைப்பதுபோல் உடைத்தது.
இதன் விளைவாக ஜனவரி 24 முதல் கவுதம் அதானி குழுமப் பங்குகள் பங்குச்சந்தையில் தொடர்ந்து பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன.இதனால் எல்.அய்.சி அதானி குழுமத்தில் செய்தி ருக்கும் முதலீட்டின் மதிப்பும் சரிந்து சில நாட் களிலேயே சுமார் ரூ.30 ஆயிரம் கோடியை இழந்தது.இது தொடர்பாக நாடாளுமன்றத் தில் பிப்ரவரி முதல் வாரத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத் அளித்த பதிலில் எல்.அய்.சி. மொத்தம் ரூ.30,127 கோடிக்கு அதானி குழுமப் பங்குகளை வாங்கியிருந்ததாகவும் ஆனால் 2023 ஜனவரி
27 நிலவரப்படி அவற்றின் சந்தை மதிப்பு ரூபாய் 56,142 கோடி என்றும் எனவே சரிவிற்குப் பிறகும் இலாபத்தில் இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
ஆனால் பிப்ரவரி மாதமும் சரிவு தொடர் கதையானதால் 2023 பிப்ரவரி 24 நிலவரப்படி
எல்.அய்.சி.யின் முதலீட்டு மதிப்பு மேலும் ரூ. 22,876 கோடி சரிவடைந்து ரூ.33,686 கோடி ரூபாயாகக் குறைந்து விட்டது. இனியும் சரிந்தால் எல்.அய்.சி. பெரும் இழப்பைச் சந்திப்பது உறுதி.அதற்கு முன்பே, எல்.அய்.சி. அதானி குழுமத்தில் உள்ள தனது பங்குகளை முழுவதுமாக விற்றுவிட்டு வெளி யேறுவதே விவேகம்.அது முதலீடு செய்திருப்பது எளிய பாலிசிதாரர்களின் பணம் என்பதை நினைவில் கொண்டு உடனே எல்.அய்.சி. இதனைச் செய்ய வேண்டும். செய்யுமா?அப்படிச் செய்ய மோடி அரசு எல்.அய்.சி.யை அனுமதிக்குமா?மில்லியன் டாலர் கேள்விகள்.பொறுத்திருந்து பார்ப்போம்
– சு பழநிராசன்,
மேனாள் துணைப் பொது மேலாளர்,
இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி