சென்னை, பிப்.27 அரசு இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நெஞ்சுவலி ஏற்படுபவர்களுக்கு உடன டியாக இருதய நோய் நிபுணர்கள் மூலமாக தனித்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் “நெஞ்சுவலி சிகிச்சை மய்யம்” துவங்கப்பட்டு அதன் மூலமாக மார்பு வலி என வருவோருக்கு உடனடியாக 24 மணிநேரமும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தனித்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் இருதய நோய் நிபுணர்கள் பணியில் இருப்பர் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் முக்கிய நோக்கம் “கோல்டன் ஹவர்ஸ்” என்று சொல்லக்கூடிய நெஞ்சுவலி ஏற்பட்ட பின்பான ஒரு மணி நேரம் மிக முக்கியம் என கூறும் மருத்துவர்கள் இந்த “கோல்டன் ஹவர்ஸ்”க்குள் சிகிச்சை பெற்றால் அது மிகுந்த பலன் அளிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பேசிய அரசு இராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர் தேரனிராஜன்,நெஞ்சு வலி ஏற்பட் டவர்களுக்கு முதலில் இ.சி.ஜி என்பது அவசியமான ஒன்று. அதனை செய் வதன் மூலம் நோயின் தன்மை குறித்து அறிந்து கொள்ள முடியும்.நெஞ்சுவலி மய்யத்தில் இசிஜி, எக்கோ உள்ளிட்ட பல்வேறு கருவிகள் உள்ளன இதன் மூலம் உடனடியாக இது இதயம் சம் பந்தப்பட்ட நோயா அல்லது வேறு பிரச்சி னையா என்பதை கண்டறிந்து, இதய நோயாக இருப்பின் உடன டியாக சிகிச்சை அளிக்கும் வண்ணம் 24 மணி நேரமும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பர். நோயாளிகளை அழைத் துச் செல்வதற்காக இதற்கென அங்கு பேட்டரி கார் உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன.
தற்பொழுது வரை நான்காயிரம் திற்கும் மேற்பட்டோர் இங்கு நெஞ்சுவலி என வந்து பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். அதில் 1029 பேருக்கு இருதய நோய் உறுதி செய்யப்பட் டுள்ளது, மேலும் 36பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும், 759 பேர் அய்.சி.யு வார்டிலும் உடனடியாக அனும திக்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப் பட்டுள்ளனர். நெஞ்சு வலி சிகிச்சை மய்யம் என்பது அரசு மருத்துவ மனைகளில் அரிதான ஒன்று. குறிப்பாக கடந்த 9 மாதத்தில் இந்த நான்காயிரம் பேர் என்ற எண்ணிக்கையை இம்மய்யம் கடந்துள்ளது என்றார்.
மேலும், உதவி பேராசிரியர் இதயவியல் பிரிவு மருத்துவர் பிரதாப் குமார் கூறுகையில், பொதுவாக தாடை யின் கீழ் பகுதியில் இருந்து வயிற்றில் தொப்புள் பகுதிக்கு மேல் வரை வலி ஏற்பட்டால் அது நெஞ்சு வலியின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் இடது தோள்பட்டையில் இருந்து இடது கை முழுவதும் வலி பரவினாலும் அதுவும் நெஞ்சுவலியினுடைய அறி குறியாக இருக்க லாம், சிலருக்கு வாந்தி மயக்கம் உள்ளிட்டவை வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வழி தெரியாமல் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம் இவையும் நெஞ்சுவலியின் அறிகுறிகள் ஆகும்.
இது சாதாரண வாய்வு பிரச்சினை உள்ளிட்டவை என எண்ணாமல் உடனடியாக மருத் துவமனையை நாடி பரிசோதனை செய்து கொள்ள வேண் டும். இருதய நோயை பொருத்தவரை “கோல்டன் ஹவர்ஸ்” என்பது மிக முக் கியமான ஒன்று.
60 நிமிடம் அதாவது நெஞ்சு வலி ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது அச்சிகிச்சை அவர்களை அந்நோயிலிருந்து மீண்டு வரவும், இயல்பாகவும் வைக்கவும் உதவுகிறது..
பொதுவாக நெஞ்சு வலி ஏற்பட்டால் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்கு பரி சோதித்த பின்னர் அவர்கள் மூலமாக இதய நோய் நிபுணர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு பின்னர் அவர்கள் சிகிச்சை பெறுவர். இதற்கு ஏற்படும் கால தாமதம் ஆபத்தினை விளைவிக்க கூடும்.
இதனால் நமது அரசு இராஜீவ் காந்தி பொது மருத்துவ மனையில் நெஞ்சுவலி சிகிச்சை மய்யம் ஏற்படுத் தப்பட்டு இதன் மூலம் இங்கு வருபவர்கள் நேரடியாக இசிஜி செய்து கொண்டு அதன் முடிவுகளின் படி அவருக்கு இதய நோய் இருப்பின் உடனடியாக இருதய உள்ளூடுருவி ஆய்வகம் மூலமாக அவர்களுக்கு ஏற் பட்டுள்ள குருதி அடைப்பு சரி செய்யப்பட்டு குருதி ஓட்டம் ஆனது சீரமைக்கப்படுகிறது.
மேலும் இருதய நோய் பரிசோதனையில் ஆரம்பித்து அதனை கண் டறியும் பட்சத்தில் அதற்கான சிகிச் சைகளையும் சேர்த்து பல லட்சங்கள் தனியார் மருத்துவமனைகளில் செலவாகும் ஆனால் அரசு மருத்துவமனையில் இச்சிகிச்சை இலவசமாகவே கிடைக்கின்றது என்றார்.