மார்ச் 20இல் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல்

2 Min Read

அரசியல்

சென்னை, பிப். 28- தமிழ்நாடு அரசின் 2023_-2024ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளாக பொது நிதிநிலை அறிக்கையுடன், வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தனியாக தாக்கல் செய்து வருகிறது. அந்த வகையில், 2023-_2024ஆம் நிதி யாண் டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களிடம்  கூறியதாவது: தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2023_-2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை வரும் மார்ச் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து, மார்ச் 28ஆம் தேதி, 2023-_2024ஆம் ஆண் டுக்கான முன்பண மானியக் கோரிக்கை மற்றும் 2022-2023ஆம் ஆண்டுக்கான இறுதி கூடுதல் மானியக் கோரிக்கை ஆகியவற் றையும் நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்.

மார்ச் 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதும், அலுவல் ஆய்வுக் குழு கூடி, எத்தனை நாட்கள் சட்டப் பேரவைக் கூட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்கும். மேலும், மானியக் கோரிக்கை உள்ளிட் டவை குறித்தும், வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்தும் அலுவல் ஆய்வுக் குழு முடிவெடுக்கும்.

பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து, சட்டப்பேரவை நிகழ்வு களைப் பதிவு செய்தது தொடர்பாக அவை உரிமைக் குழு முடி வெடுக்கும்.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம்,  தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குப் பின்னர்தான் நான் முடிவு எடுப்பேன் என்று எப்போ தும் கூறவில்லை. சட்டப்பேரவை என்ஆளுகைக்கு உட்பட்டது. யார் – யாரை எங்கு அமர வைக்கவேண்டும் என்பது என் உரிமை. அந்த அடிப்படையில் சட்டப் பேரவை யில் தகுதியான இடங்கள் வழங்கப் பட்டுள்ளன. இந்தப் பிரச்சினை சட்டப்பேரவையில் பேசி, இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முடி வடைந்த பிரச்சினை தொடர்பாக அவர்கள் (அதிமுக) மேலும் கோரிக்கை விடுக்க மாட்டார்கள். இவ்வாறு அப்பாவு கூறினார்.

அமைச்சரவை கூட்டம்:

இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை மார்ச் 9ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தில், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்குவது உள்ளிட்ட புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே செயல்படுத் தப்படும் திட்டங்களின் விரிவாக் கம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *