கழகத் தலைவருக்கு உதவியாளராக பணியாற்றிய தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு வட்டம் தெற்கு நத்தம் திரா விடர் கழக தோழர் க.சசிகுமார் (வயது45) 2.3.2023 காலை 9.45 மணியளவில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உடல் நலக்குறை வால் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
குடந்தை ராயா குழுமத்தின் நிறுவனர், தொழிலதிபர் டாக்டர் ராயா ஆர்.கோவிந்தராஜன் (வயது 63) அவர்கள் 1.3.2023 புதன் இரவு 11.30 மணியளவில் மாரடைப்பால் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். அன்னாரது இறுதி நிகழ்வுகள் 3.3.2023 வெள்ளி மாலை 3.00 மணிக்கு குடந்தை, அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கோவிந்தராஜன் குடும்பத்தாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.