சென்னை மார்ச் 3 ‘வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை அரசுக்குத் தெரிவிக்காத நிறுவனங்களின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தொழிலாளர் நலத்துறை எச்சரித்துள்ளது.
தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் நசிமுதின், முதன்மை செயலர் அதுல் ஆனந்த், இணை ஆணையர் விமலநாதன் ஆகியோர் உத்தரவுப்படி, நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை, அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணி நிலைமை மற்றும் நலன்களை முறைப்படுத்தவும், பேரிடர் காலங்களில் அவர்களுக்கு உதவி அளிக்கவும் வேண்டியுள்ளது. அதேநேரம், அத்தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், நிறுவனம் தரும் ஊதியம் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகாரும் உள்ளது.
மேலும், பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிய வருவாய், காவல், தொழிலாளர் துறை, குழந்தை தொழிலாளர் தடுப்புப் பிரிவு ஆகியவை, உணவகம், கடை, மருத்துவமனை உள்ளிட்டவற்றில் கூட்டாய்வு செய்கின்றன. இந்த காரணங்களுக்காக வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்கள் தேவைப்படுகின்றன. அதனால், வேலை வழங்கும் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பெயர், ஆதார் எண், மொபைல் போன் எண், சொந்த மாநில முகவரி ஆகியவற்றறை லீttஜீs://றீணீதீஷீuக்ஷீtஸீ.ரீஷீ.வீஸீ/வீsனீ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.