தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் சென்னை பெரியார் திடலில் இலவச கண் மருத்துவ முகாம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 17.9.2026 அன்று அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாளையொட்டி இலவச கண் மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை வெகு சிறப்புடன் நடைபெற உள்ளது. அது சமயம் சென்னை எழும்பூர் அரசினர் கண் மருத்துவமனையில் இருந்து கண் மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளனர். மற்றும் தனியார் கண் மருத்துவ மய்யங்களிலிருந்து கண் மருத்துவ வல்லுனர்களும் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் கழகத் தோழர்கள், தோழியர்கள், என அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று பெரியார் மணியம்மை மருத்துவமனையின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *