சென்னை, மார்ச் 4 சத்தீஷ்காரில் ஆசிர மம் ஒன்றில் ‘பேய்’ ஓட்டுவதாகக் கூறி சிறுமியை அடித்து, எரியும் கட்டையை 3 சீடர்கள் சிறுமியின் வாயில் திணித்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.
சத்தீஷ்கரின் மகாசாமுண்ட் மாவட் டத்தில் பதேராபலி கிராமத்தில் பாக் பாஹ்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜெய் குருதேவ் மனஸ் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு ராய்ப்பூர் மாவட்டம் அபான்பூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, ‘பேய்’ ஓட்ட வேண்டும் எனக் கூறி கடந்த சில நாள்களுக்கு முன் அவ ரது குடும்பத்தினர் அழைத்து வந்தனர்.
அந்த சிறுமி தங்களுக்கு வழங்கிய பாயசத்தில் விஷம் கலந்து விட்டாள் என குற்றச்சாட்டு கூறிய ஆசிரம நிர்வாகியான குரு மற்றும் அவரது சீடர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர் சேர்ந்து சிறுமியை கடு மையாக அடித்து, தாக்கியுள்ளனர். அந்தச் சிறுமியின் வாயில் எரியும் மர கட்டையை உள்ளே திணித்து கொடுமைப்படுத்தியுள் ளனர். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த சிறுமியின் சகோ தரர் காவல்நிலையத்தில் புகார் அளித்த தால், சிறுமி மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள் ளனர்.
அந்த ஆசிரமத்திற்கு நிறைய பேர், ‘பேய்’ ஓட்ட வேண்டும் என கூறி வருவது தெரிய வந்துள்ளது என மஹாசாமுண்ட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். ஆசிரமத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து காணப்படுகின்றன. ஆசிரமம், அதன் நிலம் மற்றும் ஆசிரம செயல்பாடுகள் உள்ளிட்ட பிற விவரங் களை பற்றி மாநில வருவாய் துறையும் கேட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் ஆசிரம நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.