கூட்டாட்சிக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

1 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 4 சென்னை தரமணியில் `அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு பேராபத்து’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று (3.3.2023) நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதாவது: இந்திய அரசமைப்பு சட்டத்தில் சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம் போன்றவற்றுக்கு முக்கி யத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சுருக்கமாக முன்னுரையில் தரப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட் டத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், இந்த முன்னுரையில் இடம்பெற்றுள்ள அம்சங்களையும் பாதுகாக்க வேண்டும். இதில் உள்ள கூறுகளை மாற்றாமல், சட்டம் இயற்றிக் கொள்ளலாம். ஆனால் அடிப்படைக் கூறுகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத் துவம், பன்மைத்துவம் போன்றவற்றைத் தகர்க்கும் முயற்சியில், ஆட்சியில் இருப்பவர்களே ஈடுபடுகின்றனர். அதனாலேயே அரசமைப்புச் சட் டத்துக்கு ஆபத்து என்கிறோம். தேசிய கல்விக் கொள்கை கூட்டாட்சி தத் துவத்துக்கு எதிரானது. இத்தகைய அரசியலில் இருந்து விடுபட்டு, ஜன நாயக இந்தியாவைக் கட்டமைக்கும் போராளிகள் என்ற உணர்வோடு சட்டம் பயில வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார். சென்னை உயர் நீதிமன்றமுன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *