தமிழ்நாடு ஆளுநர் பதவி விலகக் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

4 Min Read

அரசியல்

சென்னை மார்ச் 4 சென்னை உயர் நீதிமன்ற வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வழக்குரைஞர்கள், ஆளுநருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழுக்கமிட்டனர்.   

வழக்குரைஞர் அ.அருள்மொழி பேசுகையில், ‘சமத்துவத்தை பரப்பிய கார்ல் மார்க்ஸ் கொள்கைக்கு எதிராக கருத்துகளை கூறி வருவதோடு, நாங்கள் சமத்துவத்தை ஏற்க மாட்டோம் என்று ஆளுநர் கூறி வருகிறார். சமூகம், சமத்துவம், அறிவியல் என்ற மூன்றுக் கும் எதிராக ஆளுநர் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. ஆகவே, அவர்  உடனடியாக தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்’ என்றார்.  

அதேபோன்று வழக்குரைஞர் விஜயகுமார் கூறும்போது, ‘இந்திய நாட்டில் ஆளுநர் பதவியேற்கும் மாநிலத்தில் உள்ள மக்களின் உரிமைகளை ஆளுநர் பாதுகாக்க வேண்டும். அவர்களிடம் மூடப் பழக்க வழக்க கருத்துகளை பரப்பக்கூடாது. ஆனால், தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஜாதி வெறியைத் தூண்டும் சனாதன கொள்கையை ஆளுநர் ரவி பிரச்சாரம் செய்து வருகிறார் சமூகநீதிக்கு எதிராக செயல்படும் ஆளுநர் உடனடியாக பதவியை துறந்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்’ என்றார்.

10 மண்டலங்களில்  

சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு ஒப்புதல்

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, மார்ச் 4- சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் 370 உட்புற தார் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு ஒப்புதல் அளித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் கூடியது.

கூட்டம் தொடங்கியதும் துருக்கியில் நில நடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் மொத்தம் 74 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்த நிலையில் 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மா னங்கள் வருமாறு: சென்னை மாநகராட்சியில் 844 நவீன பேருந்து நிழற்குடைகளை புனரமைத்து இயக்குதல் மற்றும் மாற்றம் அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு பொது தனியார் கூட்டாண்மை முறையில் புதுப்பித்தல் மற்றும் பராமரிக்கப்படுகிறது. புவிசார் தொழில்நுட்பம் மூலம் சென்னை மாநகராட் சிக்குட்பட்ட கட்டடங்களை டிரோன் மூலமாகவும், வீடுவீடாக சென்று சீராய்வு செய்யப்பட்டதில் அளவீடு உபயோகத்தன்மை மாறு பாடு உள்ள கட்டடங்களை அளவீடு செய்து வருவாய் பெருக்க குறைந்த விலைப்புள்ளி (5 கோடி) அளித்த நிறுவனங்களுக்கு பணியாணை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-2023 திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 1, 2, 3, 4, 6, 10, 12, 13, 14, 15 மண்ட லத்தில் 370  உட்புற தார் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு 17 சிற்பங்களுக்கான ஒப்பந்த தாரர்களுக்கு பணி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2021-2022 திட்டத்தின் கீழ் மண்டலம் ஒன்று முதல் 15 வரை 300 எண்ணிக்கையிலான உட்புற தார் சாலைகளை மேம்படுத்தும் பணிக்கு 30 ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. மேலும் சிங்காரச் சென்னை 2.0 திட் டத்தின் கீழ் மண்டலம் 1, 2, 3, 5, 11, 13 மற்றும் 14இல் 233 எல்லைக்குள் ஆன உட்புற சாலைகளை மேம்படுத்தும் பணிக்காக 20 சிற்பங்களுக்கு குறைந்த விலை புள்ளி அளித்த ஒப்பந்ததாரருக்கு பணி வழங்கப்படுகிறது. அத்துடன் மண்டலம் 3, 4, 6, 8, 9, 10,1 3 மற்றும் 15ல் 34 எண்ணிக்கையிலான பேருந்து தடை சாலைகளை மேம்படுத்தும் பணிக்காக 13 சிற்பங்களுக்கு குறைந்த விலை புள்ளி அளித்த ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங் கப்படுகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

‘குப்பை இல்லாத சென்னை’ சாத்தியமா?

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தில், கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு மேயர் பிரியா பதிலளித்து பேசினார். 12வது வார்டு கவுசிலர் கவி கணேஷ் (திமுக): ‘குப்பை இல்லாத சென்னை’ என்ற நிலை வர வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மேயராக பதவி வகித்த போது அவரது ஆசையாக இருந்தது. அதற்கான  நடவடிக்கைகளை எடுத்தார். அதன் பிறகு மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது அதை செயல்படுத்துவதற்கான முயற்சி எடுத்தார். அதன்பின் 2011 முதல் அதிமுக அரசு அதை செய்ய தவறி விட்டது. ‘குப்பை இல்லாத சென்னை’ என்பது சாத்தியம் இல்லை என்று பலர் விமர்சிக்கின்றனர். அதை சாத்தியப்படுத்தும் வகையில் எனது வார்டில் அதை அமல்படுத்தி உள்ளேன். இதை சென்னை மாநகராட்சி மண்டலங்களில் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13ஆவது வார்டு கவுன்சிலர் சுசீலா (திமுக): மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கொசு உற்பத்தி  அதிகரிக்கிறது. லாரி மூலம் தண்ணீரை வெளியேற்றினாலும் முழுவதுமாக செல்லாமல் தேங்கி உள்ளது. எனவே கொசுவால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். 

மேயர் பிரியா: இதுகுறித்து வட்டார துணை ஆணையர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை  எடுப்பார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *