சென்னை, மார்ச் 4- இலங்கைத் தமிழர் களின் மறுவாழ்வு முகாம் தலை வர்கள், ஆலோ சனைக் குழு உறுப் பினர் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (3.3.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
1983இ-ல் இலங்கையில் ஏற் பட்ட இனக்கலவரம் காரணமாக, லட்சகணக்கான தமிழர்கள் அங் கிருந்து வந்து, தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்காக 29 மாவட்டங்களில், 106 முகாம்கள் அமைக்கப்பட்டு, 19,346 குடும் பங்களைச் சார்ந்த 58,245 பேர் வசித்து வருகின்றனர். 2021-இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப் பேற்றதும், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணக்கொடை, கல்வி உதவித் தொகை, துணிகள் மற்றும் பாத் திரங்கள் வழங்குவதற்கான தொகைகள் பன்மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டன.
மேலும், ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் மானியம், இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப்பட்டு வருகி றது. திறன் மேம்பாட்டுப் பயிற்சி களும் நடத்தப்படுகின்றன. முகாம் களில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சமுதாய முதலீட்டு நிதி ரூ.75 ஆயிரத்தில் இருந்து, ரூ.1.25 லட்ச மாக உயர்த்தப்பட்டது. இதற்காக ரூ.6 கோடி நிதி அரசால் வழங்கப் பட்டுள்ளது.மேலும், தமிழ்நாடு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து சமூக நலத் திட்டங் களும், முகாம் வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பழுத டைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் புதிதாகக் கட்டித் தரப் படும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக ரூ.176 கோடி யில், 3,510 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ரூ.10 கோடி, முகாம் பராமரிப்புச் செலவு களுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. குடியுரிமை மற்றும் சுய விருப்பத்துடன் தாயகம் திரும் புதல் போன்றவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகாண அமைச்சர் தலைமை யில் ஆலோசனைக் குழு அமைக் கப்பட்டுள்ளது.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர் களின் வாழ்க்கைத் தரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திருப்பத்தூர், கரூர், திருச்சி, மதுரை, திருவண் ணாமலை, நாமக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 9 முகாம் களின் தலைவர்கள் மற்றும் ஆலோ சனைக் குழு உறுப்பினர் இளம்பரிதி ஆகியோர் சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். அயல கத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ் வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அதிகாரிகள் உட னிருந்தனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் தலைவர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு
சென்னை, மார்ச் 4- இலங்கைத் தமிழர் களின் மறுவாழ்வு முகாம் தலை வர்கள், ஆலோ சனைக் குழு உறுப் பினர் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (3.3.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
1983இ-ல் இலங்கையில் ஏற் பட்ட இனக்கலவரம் காரணமாக, லட்சகணக்கான தமிழர்கள் அங் கிருந்து வந்து, தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்காக 29 மாவட்டங்களில், 106 முகாம்கள் அமைக்கப்பட்டு, 19,346 குடும் பங்களைச் சார்ந்த 58,245 பேர் வசித்து வருகின்றனர். 2021-இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப் பேற்றதும், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணக்கொடை, கல்வி உதவித் தொகை, துணிகள் மற்றும் பாத் திரங்கள் வழங்குவதற்கான தொகைகள் பன்மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டன.
மேலும், ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் மானியம், இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப்பட்டு வருகி றது. திறன் மேம்பாட்டுப் பயிற்சி களும் நடத்தப்படுகின்றன. முகாம் களில் இயங்கி வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சமுதாய முதலீட்டு நிதி ரூ.75 ஆயிரத்தில் இருந்து, ரூ.1.25 லட்ச மாக உயர்த்தப்பட்டது. இதற்காக ரூ.6 கோடி நிதி அரசால் வழங்கப் பட்டுள்ளது.மேலும், தமிழ்நாடு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து சமூக நலத் திட்டங் களும், முகாம் வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பழுத டைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் புதிதாகக் கட்டித் தரப் படும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக ரூ.176 கோடி யில், 3,510 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர் களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ரூ.10 கோடி, முகாம் பராமரிப்புச் செலவு களுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. குடியுரிமை மற்றும் சுய விருப்பத்துடன் தாயகம் திரும் புதல் போன்றவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகாண அமைச்சர் தலைமை யில் ஆலோசனைக் குழு அமைக் கப்பட்டுள்ளது.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர் களின் வாழ்க்கைத் தரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திருப்பத்தூர், கரூர், திருச்சி, மதுரை, திருவண் ணாமலை, நாமக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 9 முகாம் களின் தலைவர்கள் மற்றும் ஆலோ சனைக் குழு உறுப்பினர் இளம்பரிதி ஆகியோர் சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். அயல கத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ் வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அதிகாரிகள் உட னிருந்தனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.