தமிழ்நாட்டில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு! செப்டம்பர் 25 முதல் காலாண்டு விடுமுறை!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 10– தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 2026-2027-ஆம் கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, காலாண்டுத் தேர்வுகள் வருகிற செப்டம்பர் 16-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

தேர்வு நேரங்கள் மற்றும் அட்டவணை விவரம்:

1 முதல் 8-ஆம் வகுப்பு வரை: செப்டம்பர் 16 முதல் 24 வரை குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அந்தந்தப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.

9-ஆம் வகுப்பு: மதியம் 2.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும் 10-ஆம் வகுப்பு: காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தேர்வுகள் நடைபெறும். பாடவாரியாக தேர்வு அட்டவணை (9 மற்றும் 10-ஆம் வகுப்புகள்):

செப்டம்பர் 16 (செவ்வாய்): தமிழ், செப்டம்பர் 17 (புதன்): ஆங்கிலம், செப்டம்பர் 18 (வியாழன்): விருப்பப் பாடம், செப்டம்பர் 21 (திங்கள்): கணிதம், செப்டம்பர் 22 (செவ்வாய்): உடற்கல்வி, செப்டம்பர் 23 (புதன்): அறிவியல், செப்டம்பர் 24 (வியாழன்): சமூக அறிவியல்.

10 நாட்கள் காலாண்டு விடுமுறை: காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாணவர் களுக்கு செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. விடுமுறை முடிந்து அக்டோபர் 5-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் மீண்டும் திறக்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *