பெலாரஸ், மார்ச் 5- அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மனித உரிமை ஆர்வலருமான அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பெலாரஸின் நீண்ட கால பிரதமர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
அதில் 60 வயதான அலெஸ் பியாலியாட்ஸ், மூன்று இணை பிரதிவாதிகள் போராட்டங்களுக்கு நிதியளித்ததாகவும், பணத்தை கடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். இந்நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெலாரஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.