சென்னை, மார்ச் 6- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ப.மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று (4.3.2023) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இக்கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு பங்கேற்று ப.மாணிக்கம் நூற்றாண்டு மலரை வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெற்றுக்கொண்டு விழா நிறைவுரையாற்றினார்.
இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன், இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவா ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவிற்கு இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட் டுக் குழுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் முன்னிலை வகிக்க, மாநிலத் துணைச் செயலாளர் தோழர் நா.பெரியசாமி வரவேற்புரை யாற்றினார். நிறைவாக மாநிலத் துணைச் செயலாளர் தோழர் மு.வீர பாண்டியன் நன்றி கூறினார்.
இவ்விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிட மாணவர் கழக மாநில செய லாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலா ளர் சோ.சுரேஷ் மற்றும் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.