13ஆம் தேதி தேர்வு: பிளஸ்-2 விடைத்தாள்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஈரோடு,  மார்ச் 5- பிளஸ்2 தேர்வு 13ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு விடைத் தாள்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பிளஸ்-2 பொதுத் தேர்வு 13ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு விடைத்தாள்கள் தயார் செய்யும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. 

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. 

இதை முன்னிட்டு மாணவ-மாணவிகள் தேர்வு எழுதும் விடைத்தாள்கள் தயார் செய்யும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கான விடைத்தாள்களில் முகப்பு தாள்கள் இணைக்கும் பணி ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்து வருகிறது. 

தையல் எந்திரம் மூலம் முகப்பு தாள்கள் தைத்து தயார் செய்யப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு முன்பு விடைத்தாள்கள் பணி முடிக்கப்பட்டு காப்பு அறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *