கடலூர் மாவட்டம் சிறீமுஷ்ணம் ஒன்றியத்தில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28-02-2023 பிற்பகல் சிறீமுஷ்ணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகள், நூல்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிதம்பரம் கழக மாவட்டத் துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்
கோ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில பொறுப்பாளர் மு.பாலகுருசாமி,
அ.செங்குட்டுவன். தலைமை ஆசிரியர், (ப.க), பள்ளி தலைமை ஆசிரியர், தமிழாசிரியர் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.