பொத்தனூர், மார்ச், 6- நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 12. 2. 2023 அன்று காலை 10 மணி அளவில் பொத்தனூர் பெரியார் படிப்பக வளாகத்தில் நடை பெற்றது.
முன்னதாக படிப்பக வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் மாலை அணிவித்தார்.
மாநில பொறுப்பாளர்க ளுக்கு பெரியார் பெருந்தொண் டர் பொத்தனூர் க.சண்முகம் சிறப்பு செய்தார்.
நூறாண்டு கண்ட பொத்தனூர் சண்முகம் அவர்களுக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
கூட்டத்திற்கு பகுத்தறிவாளர்கள் கழக மாவட்டத் தலை வர் வழக்குரைஞர் ப. இளங்கோ தலைமை ஏற்றார்.
பகுத்தறிவாளர்கள் கழக மாவட்ட செயலாளர் வீர. முருகன் வரவேற்று உரையாற்றினார்.
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் அய்யா க.சண்முகம், நாமக்கல் மாவட்ட கழக தலைவர் ஆ.கு. குமார், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் வழக்குரைஞர் வை. பெரியசாமி, நாமக்கல் மாவட்ட கழக துணைத் தலைவர் கா.சா அசேன் ஆகியோர் முன்னிலை ஏற்றார்கள்.
பொதுச் செயலாளர் வி.மோகன் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம், அவசியம் என்ன என்பது பற்றி விளக்கி கூறி அது பற்றிய கருத்துகளை வருகை தந்தவர்கள் வழங்கிட கேட்டுக் கொண்டார்கள்.
அவரது வேண்டுகோளை ஏற்று, புலவர் இராமலிங்கம், விடுதலை வாசகர் வட்டம் அன் பழகன், பொதுக்குழு உறுப்பினர் வை. நடராஜன், மதிமுக மாண வரணி மாநில துணைச் செயலாளர் த.பவுன்ராஜ், செந்தில் குமார், ஆண்டவர் நகர் பெரிய சாமி, வெங்கமேடு சிறீதர், வெண் ணத்தூர் செல்வகுமார், பொத்த னூர் ராமசாமி, துணை ஆட்சியர் ஓய்வு ஆர் ஜெகதீசன், பொத்தனூர் எஸ்.கே பொன்னையா, மருத. அறிவாயுதம், வேலூர் கண்ணன், வேலூர் முசாதில், பொத்தனூர் க.சண்முகம் ஆகி யோர் மாவட்டத்தில் பகுத்தறி வாளர் கழகம் பரவலாக்கப் படுவது எப்படி என்றும், மாவட்டத்தின் செயல்பாடுகள் பற்றி யும் அனைவரும் கூறினர்.
தொடர்ந்து பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் வா. தமிழ் பிரபாகரன் ஆசிரியர்களுடைய பணி, அவர்கள் இந்த இயக் கத்தை வளர்க்க வேண்டியதன் அவசியம், அவர்களுக்கு உள்ள வாய்ப்பு பற்றி கூறினார்.
தொடர்ந்து பொதுச் செய லாளர் வி. மோகன் பகுத்தறி வாளர் கழகம் தேவையா? இந்த சமுதாயத்தில் பகுத்தறிவாளர் கழகம் செயல்படாவிட்டால் என்ன? செயல்பட்டால் என்ன நடக்கும்? என்பது எடுத்துக் கூறி பகுத்தறிவாளர் கழகத்தை கட் டமைக்க வேண்டியதன் அவசி யத்தை எடுத்துக் கூறினார்.
இறுதியாக சிறப்புரையாற் றிய மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் பகுத்தறிவாளர் கழகம் தோன்றியது ஏன்? எத னால் அது தோற்றுவிக்கப்பட் டது? என்பது பற்றிய வரலாறு களை எல்லாம் தொடர்ந்து கூறி இன்றைய நிலை என்ன? பொத் தனூரில், நாமக்கல் மாவட்டத் தில் இப்போது பகுத்தறிவாளர் கழகத்தை வளர்க்க வேண்டிய சூழ்நிலைக்கான காரணம் என்ன என்பது பற்றியும் எடுத்து கூறி, பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பயிற்சிப் பட்டறை, கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்த வேண்டும் என்றும் அப் படி நடத்துவதற்கு தகுதியான மாவட்டம் நாமக்கல் என்பதை யும் எடுத்துச் சொன்னார்.
தலைவருடைய உரைக்கு பின்னால் மாவட்ட தலைவர் ப. இளங்கோ தாங்கள் தயாராக இருப்பதாக உறுதி கூறினார்.
இறுதியாக பகுத்தறிவாளர் கழக செயலாளர் மருது.அறிவா யுதம் நன்றி கூறிட கலந்துரை யாடல் கூட்டம். முடிவுற்றது.