புதுடில்லி மார்ச் 6- நாட்டில் 97 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று பாதிப்பு 300-க்கும் அதிகமாக பதிவாகி யுள்ளன, ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சனிக்கிழமை (4.3.2023) காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 334 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 87 ஆயிரத்து 496 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து வெள் ளிக்கிழமை 170 பேர் குணமடைந்துள்ளனர். குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 54 ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98 சதவிகிதமாக உள்ளது. தற்போது நாடு முழு வதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறு வோர் எண்ணிக்கை 2,686 ஆக உள்ளது.
ஒரே நாளில் 3 பேர் இறந்துள்ளனர். அவர்களில் மகாராஷ்டிராவில் 2 பேர், கேரளத்தில் ஒருவர் என மூன்று பேர் இறந்துள்ளனர், இறந்தோரின் எண்ணிக்கை 5,30,775 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 63 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.