லக்னொ, மார்ச் 6- உத்தரப்பிரதேசத்தில் ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தியதால் சிறுமி ஒருவர் எய்ட்ஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி ஒருவருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதியானது. விசாரணையில் ஒரே ஊசியை குழந்தைகள் பலருக்கும் மருத்துவர்கள் பயன் படுத்தி இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் இன்னும் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு அம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.