சென்னை, மார்ச் 6- பதாகைகள், செங்கோல் உள்ளிட்ட பரிசு கள் வேண்டாம்; ஆடம்ப ரத்தை தவிர்த்து, புத்தகங்கள், மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப் புகள், இளைஞரணி அறக்கட் டளைக்கு நிதியாக தாருங்கள்’ என கட்சியினருக்கு திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள் ளார். இதுகுறித்து அவர் நேற்று (5.3.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இளைஞரணிச் செயலாள ராக திமுக நிகழ்ச்சிகளிலும், அமைச்சராக அரசு நிகழ்ச் சிகளிலும் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும்போது, அளிக்கப்படும் வரவேற்பை கண்டு நெகிழ்கிறேன். என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், காட்டும் அன்பும் என்னை இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கிறது. அதே நேரம், என்னை வரவேற்று பதாகைகள் வைப்பது, பட் டாசுவெடிப்பது, வெள்ளிச் செங்கோல், வாள் போன்ற வற்றை பரிசாகவழங்குவது, மாலை அணிவிப்பது, பொன் னாடை போர்த்துவது போன்ற நடைமுறைகள் தொடர்கிறது. இவற்றை தவிர்க்க பலமுறை கேட்டுக் கொண்ட பின்பும், தொடர்வது வருத்தமளிக் கிறது. திமுக தலைவர் அறி வுரைப்படி, புத்தகங்கள் வழங் குங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
நீங்கள் அளிக்கும் புத்தகங் களை தேவைப்படும் பள்ளி, கல்லூரிகளின் நூலகங்களுக்கு வழங்குகிறோம். திமுகதலைவ ரின் பிறந்த தினத்தை ஒட்டி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நான் முன்னெ டுத்துள்ள நடமாடும் ‘கலைஞர் நூலக’த்தில் உள்ள 4 ஆயிரம் புத்தகங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் புத்தகங்கள் நீங்கள் எனக்கு அன்பளிப்பாக வழங் கியவை. மேலும், ‘ஆதரவற் றோர், முதியோர் இல்லங்க ளுக்கு வழங்கும்வகையில் மக ளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகளை வழங்குங்கள்’ என்று நான் கேட்டுக் கொண் டபடி நீங்கள் வழங்கிய அந்தப் பொருட்களை சென்னையைச் சுற்றியுள்ள பல இல்லங்களுக்கு அளித்துள்ளேன்.
அதேபோல், பலரும் என்னி டம் இளைஞர் அணி அறக் கட்டளைக்கு நிதியுதவி வழங் குகின்றனர். அதில்பாரபட்சம் பார்க்காமல், என் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். அந்த நிதி யிலிருந்து மருத்துவம், கல்வி போன்ற உதவிகளைத் தேவை யுள்ள ஏழை-எளிய மக்களுக்கு வழங்கி வருகிறோம். இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில், நாமக் கல், சேலம், கரூர் மாவட்டங் களைச் சேர்ந்த 55 பயனாளி களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என ரூ.13.75 லட்சத்தை வழங்கி யுள்ளோம். இப்பணியைத் தமிழ்நாடு முழுவதும் தொடர உள்ளோம். எனவே நீங்கள் காட்டும் அன்பை, இளைஞ ரணி அறக்கட்டளைக்கான நிதியுதவியாக வழங்குங்கள். வறுமைப் பின்னணியில் வாழ்வை வெல்லத் துடிக்கும் மாணவர்களின் கல்வி காக்க உதவலாம்.
நீங்கள் எனக்கு அன்பளிப் பாக வழங்கும் ஒரு புத்தகம் ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள குழந்தைக்கு உதவும். மகளிர் சுயஉதவிக் குழுத் தயாரிப்புகள் தயாரிப்பவர்-பயன்படுத்து வோர் என இருதரப்புக்கும் பயனளிக்கும். எனவே, திமுக தொண்டர்கள் பயனற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து, தேவையானவர்களுக்கு உதவும் வகையில் புத்தகங்கள், அறக்கட்டளைக்கான நிதியுத வியையும்,மகளிர் சுய உதவிக் குழுத் தயாரிப்புகளை மட்டுமே அன்பளிப்பாக வழங்கிடுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.