சென்னை, மார்ச் 6- மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (அய்ஏடிஆர்) 11-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்புவிடுக் கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறு வனத்தின் தலைவர் டான்சிறீ மாரி முத்து சென்னையில் நேரில் சந்தித்து மலேசியாவில் நடைபெற இருக்கும் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொண் டார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவ னத்தின் (அய்ஏடிஆர்) 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களும், பிற மொழி அறிஞர்களும் கலந்துகொண்டு தமிழ் மொழியின் சிறப்பையும், பிற மொழியில் உள்ள சிறப்புகளையும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடை பெற்று வருகின்றன. இதுவரையில் 10 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 11 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார் ஜாவில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21 முதல் 23 வரை மலேசியாவில் நடை பெறும் என அண்மையில் புதிய அறிவிப்பு வெளியானது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சார்ஜாவில் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், நிர்வாகக் கார ணங்களுக்காக மாற்றப்பட்டதாகத் தக வல்கள் வெளியாகியிருந்தன.