குடந்தை, மார்ச் 7 குடந்தை கழக மாவட்டம், திருநாகேசுவரத்தில் 05.03.2023 அன்று சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருநாகேசுவரம் நகர் முழுவதும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது.
கோட்டை போன்று அமைக்கப்பட்டிருந்த மாநாட்டு மேடையில் தமிழர் தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்பாளர் களும் கலந்து கொள்ள கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை களை விளக்கியும், அனைத்துத் துறைகளிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலி யுறுத்தியும் சிறப்புரையாற்றினார்.
மிகச் சிறப்பாக மாநாடு போன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கழக பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது வயதை போற்றுகின்ற வகையில் குடந்தை கழக மாவட்டத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூபாய் 50,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.