சென்னை, மார்ச் 7 வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வடமாநிலத்தவர்கள் விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர்அண்ணாமலை, திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணி கட்சியினர் வடமாநிலத்தவர்கள் குறித்து பேசியதை குறிப்பிட்டு, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை வன்முறையைத் தூண்டும் விதமாக இருப்பதாக அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வடமாநிலத்தவர் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை என்ன செய்தது என்பதை சிபிஅய் விசாரிக்க வேண்டும் என்றும் ஒரு அறிக்கையை அண்ணாமலை வெளியிட்டி ருந்தார்.
இந்நிலையில், வடமாநிலத்தவர்கள் விவகாரம் குறித்து திமுகஉட்பட பலரை குற்றம் சாட்டி,சவால்விட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை மீதுவழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரவழைப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை, அண்ணாமலை மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடத்திவருகிறார்கள்.
அந்த ஆலோசனையில், அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரணைக்கு அழைக் கவும் உயர் அதிகாரிகள், சட்டவல்லுநர்களு டன் ஆலோசனையில் ஈடுபட்டு முடிவு எடுக்க இருப்பதாகவும் காவல் தரப்பில் கூறப்படுகிறது.