அம்பத்தூர், மார்ச் 8 பெரியார் 1000 வினா- விடை தேர்வு பரிசு வழங்கும் விழா- சென்னை அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் 6.3.2023
அன்று காலை 9 மணிக்கு தலைமை ஆசிரியர் சி.வனிதா ராணி தலைமையில் நடைபெற்றது. எம்.கே.பி.நகர் தலைவர் சதாசிவம் தேசிய கொடி ஏற்ற இரா.தெய்வமணி முதல் பரிசு வழங்க சி.கே.துரை பதக்கமும் சான்றிதழும் வழங்கினார்.
நிகழ்வில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் சமூக நீதி நாள் உறுதிமொழி வாசிக்க. மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.கார்வேந்தன் தெற்கும் வடக்கும் புத்தகத்தையும், அம்பத்தூர் பகுதி கழகத் தலைவர் பூ.இராமலிங்கம் பெரியார் படத்தையும் வழங்கினர். அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் அய்.சரவணன், திருமுல்லைவாயல் பகுதி கழகத் தலைவர் ச.இரணியன், ஆவடி நகர செயலாளர் இ.தமிழ்மணி, ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏ.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இறுதியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வளர்மதி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.