ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

Viduthalai
1 Min Read

 8.3.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ‘திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள், யாரும் நம்ப வேண்டாம்’ என்று வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இங்குள்ள மக்கள் தங்களுடன் சகோதரத்து வத்துடன் பழகுகிறார்கள் எனக்கூறிய அத்தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருவதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

தி இந்து:

* இதற்கு முன்னர் இல்லாத வகையில், குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கரின் தனிப் பணியாளர்கள் 8 பேர், மேல்-சபையின் கீழ் வரும் 20 குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தற்கு, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:

* ஆர்எஸ்எஸ் ஓர் அடிப்படைவாத, பாசிச அமைப்பு என இங்கிலாந்தில் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு. அனைத்து அதிகாரமும் பிரதமர் அலுவலகத்தில் உள்ளதாகவும் பேச்சு. எனது நாட்டின் நிலை குறித்து நான் பரிதாபமாக உணர்கிறேன், என்கிறார் ராகுல் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். காரரின் மகள்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *