புதுடில்லி,மார்ச்8- ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெண்கள் பிரிவான ராஷ்டிர சேவிகா சமிதியின் ஓர் அங்கம் சாம்வர்தினி நியாஸ். இது ‘கர்பா சன்ஸ்கார்’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது.
இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் மாதுரி மராத்தே நேற்று (7.3.2023) கூறும் போது, “கர்பா சன்ஸ் கார் திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சியுடன் பகவத் கீதை, ராமாயண பாடம் கற்பிக்கப்படும். இதன் மூலம் தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைகள் கலாச்சார மதிப்பை தெரிந்து கொள்ள உதவும். கர்ப்ப காலம் முதல் குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை இந்த பயிற்சி வழங்கப் படும். கருவில் இருக்கும்போதே குழந்தைகள் 500 வார்த்தை கள் வரை தெரிந்து கொள்ள முடியும்” என்றாராம்!