கடலூர் மாவட்டம் திருமுட்டம் ஒன்றியத்தில் 7-3-2023 அன்று காவாலக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினாடி-வினா தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள்,சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில பொறுப்பாளர் மு.பாலகுருசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி சிலம்பரசன் , பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.