திருச்சி, மார்ச் 8- உலக மகளிர் நாள் மற்றும் சிறுதானிய ஆண்டை முன்னிட்டு திருச்சி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை யின் சித்த மருத்துவப் பிரிவு அடுப்பில்லா சிறுதானிய உண வுப் போட்டி மற்றும் கண்காட்சியினை 07.03.2023 அன்று நடத்தி யது.
திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட் டங்களின் ஒருங்கிணைந்த தலைமை சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இப் போட்டியினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவக்கி வைத்து சிறப்பித்தார்.
இப்போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் சார்பில் நான்கு குழுக்கள் பங்கு கொண்டு மகளிர் நலன் காக்கும் வகையான கருப்பையை பலப்படுத்தும் சிறுதானிய லட்டு, பாயசம், சாமை சிற்றுண்டி, நுரையீரல் நோய்களை விரட்டும் வெற் றிலை உருண்டை, இதயத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத் தும் ராகி மில்க் ஷேக், புத்து ணர்ச்சி அளிக்கும் சிறுதானிய பானங்கள், வயிற்றுப்புண் போக்கும் அவல் தேங்காய் பால், பானகம் போன்ற உணவுகளை அடுப்பில்லா உணவுப்போட்டி யில் தயார் செய்து நடுவர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தினர். இதில் பெரியார் மருந்தியல் கல்லூரி இளநிலை மருந்தியல் இரண்டாம் ஆண்டு மாணவிகள் நா. கீர்த்திகா, ரா. சகானா நிகார், சே. பிரவீனா, மா. ஸ்டெரினா ஆகியோர் இரண்டாம் பரிசு பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அவர்கள் மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி பெண்களுக்கான நல வாழ்வு குறித்து சிறப்பாக சிந்தித் தமைக்கு தமது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
வெற்றி பெற்ற மாணவிக ளுக்கு கல்லூரியின் நிர்வாகத்தி னர், முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். திருச்சி மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து 18 குழுக்கள் இப்போட்டியில் பங்கு கொண் டனர் என்பது குறிப்பிடத்தக்கது.