தஞ்சாவூர்,மார்ச்9- திருநாகேசுவரம் ராகு கோவிலில், பரிகாரம் செய்ய வருபவர்களிடம், தரிசன டிக்கெட் விலையை விட, அதிக தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில், கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவரிடம், கோவிலில் பணிபுரியும் ஜெயசந்திரன், 500 ரூபாய் வீதம் மூன்று பேருக்கு, 1,500 ரூபாயை வசூல் செய்தார். அதுபோல, ஒவ்வொரு முறையும், ஜெயசந்திரன் அதிக பணம் வசூல் செய்தார். இதையறிந்த முருகேசன், கடந்த முறை கோவிலுக்கு வந்த போது, காட்சிப் பதிவு எடுத்து வெளியிட்டார். இது தொடர்பாக, சென்னையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதர னிடம் புகார் மனு அளிக்கப்பட்டதாம்!
மனுவில் கூறியுள்ளதாவது: டிக்கெட் விலை, 100 ரூபாய் என்ற போதிலும், 500 ரூபாய் பெற்று, கோவில் ஊழியர் ஜெயசந்திரன், முறையான ரசீது கொடுக்காமல் இருந்துள்ளார். கோவிலுக்கு வரும் வருமானத்தை, ஜெயசந்திரனே எடுத்துக் கொண்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், ராகு கால சிறப்பு பூஜை நேரத்தில், ஜெயசந்திரன் கூடுதலாக பொறுப்பு பார்க்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித் துள்ளார். இணை ஆணையரிடம் ஆணை வாங்கி, தியேட் டர்களில், ‘பிளாக்கில்’ டிக்கெட் விற்பது போல, கோவில்களில் டிக்கெட் விற்றுள்ளார். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.