கோயில் பூசாரி மீது தாக்குதல்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

விழுப்புரத்தில் கோயில் பூசாரி தாக்கப்பட்டதைக் கண்டித்து பக்தர்கள் நேற்று (18.8.2026) மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மார்க்கெட் பகுதி, பாகர்ஷா வீதியில் அமைந்துள்ளது சிறீரேணுகாம்பாள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்.  இக் கோயிலில் கண்ணன் (65) என்பவர் பூசாரியாக வேலைபார்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (17.8.2026) இவர் கோயிலில் வழக்கமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதுபோதையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் பூசாரி கண்ணனிடம் வீண் தகராறு செய்து, தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல வழிபாட்டுக்கு வந்த பக்தர்கள் கோயில் திறக்காமல் இருப்பதைக் கண்டு, விசாரித்ததில் பூசாரி தாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோயில் முன் அமர்ந்து பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோயில் பூசாரியைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *