அய்தராபாத், மார்ச் 9 தெலங்கானா மாநிலம் கரீம் நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அணில் (12), சந்தோஷ் (13), வீர ஆஞ்சநேயுலு (16) ஆகிய மூவரும், ஹோலி கொண்டாடிவிட்டு மானேரு நதிக்கு சென்று குளித்தனர். அப்போது மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்குவதாக தெலங் கானா அரசு அறிவித்துள்ளது. மேலும் அமைச்சர் கமலாகர் தனது சொந்த செலவில் தலா ரூ.2 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதேபோல் நாகர்கர்னூல், விகாராபாத் மாவட்டம், மால் ரெட்டி பல்லி பகுதியில் ஏரியில் குளிக்கச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.