‘கேரளம்’ ஆனது கேரளா: புதிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திருவனந்தபுரம், ஆக. 18– கேரளா பெயர் மாற்ற மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, கேரளா என்ற மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ ஆக மாறுகிறது.

கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கும், அதற்கேற்ப அரசி யலமைப்பின் முதல் அட்டவணையை திருத்துவதற்கும், அரசியலமைப்பின் 3 ஆவது பிரிவின் கீழ் கேரள பெயர் மாற்ற மசோதா வழிவகுக்கிறது.

இந்த மசோதா கடந்த 11.8.2026 மக்களவையிலும், 12.8.2026 மாநிலங்க ளவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலை வரின் ஒப்புதலுடன், இந்த மசோதா இப்போது சட்டமாகியுள்ளது.

‘கேரளா’ இனி ‘கேரளம்’ மாநிலம் என்று அழைக்கப்படும் என்பதை இந்த மசோதா உறுதி செய்கிறது. கேரள அரசு, சட்டப்பேரவையில் மாநிலத்தின் பெயர் மாற்ற தீர்மானத்தை 2024 ஜூன் மாதத்தில் ஒன்றிய அரசுக்கு அனுப்பி யிருந்தது.

அதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் அந்த முன்மொழிவை மாநில சட்டப்பேரவையின் கருத்துக்காக அனுப்பினார். அதைத் தொடர்ந்து, கேரள சட்டப்பேரவை பெயர் மாற்ற முன்மொழிவை ஏற்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.

தற்போது கேரள பெயர் மாற்ற மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, இந்திய அரசியலமைப்பின் முதல் அட்ட வணையில் ‘கேரளா’ என்ற பெயர் நீக்கப்பட்டு ‘கேரளம்’ என்று மாற்றப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *